இந்தியா
இன்று இமாச்சலில் பிரதமர் மோடி தசரா கொண்டாட்டம்

புதுடில்லி: இன்று தசரா பண்டிகையை இமாச்சல் பிரதேசத்தில் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் செல்கிறார்.அங்கு ரூ.3,650 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் முக்கியமாக பிலாஸ்பூரில் ரூ. 1,470 கோடியில் கட்டப்பட்டுள்ள டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர், குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளகிறார்.