‛செக்’ நிராகரித்த பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அபராதம்

கன்னடத்தில் எழுதிய ‘செக்’ நிராகரித்த, ஹளியாலா பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு, தார்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 85 ஆயிரத்து 177 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
கர்நாடகாவில் தார்வாடை சேர்ந்த ஆங்கில பேராசிரியர் வாதிராஜாசார்யா இனாம்தார், தன் சேமிப்பு கணக்கில் இருந்து, 6,000 ரூபாய் எடுக்க முடிவு செய்தார். இதற்காக ஹளியாலாவின் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செக் எழுதி கொடுத்தார். ஆனால், இதை கன்னடத்தில் எழுதியதால், வங்கி கிளை நிராகரித்தது.
இது குறித்து கேள்வியெழுப்பிய இனாம்தார், தார்வாட் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், ‘மனுதாரரின் சேமிப்பு கணக்கில், 9 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் உள்ளது. ‘இதில் 6,000 ரூபாய் எடுக்க செக் கொடுத்துள்ளார்.கன்னடத்தில் எழுதிய காரணத்தால், செக்கை நிராகரித்தது, கடமை தவறியது போலாகும்.’எனவே மனுதாரருக்கு நிவாரணம் மற்றும் அபராதமாக, 85 ஆயிரத்து 177 ரூபாய் செலுத்த வேண்டும்’ என, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
உள்ளூர் நியூஸ் வாட்ஸாப்ப் குரூப் Link WHATSAPP