சினிமா

கடைசி படத்தின் மூலம் நிறைவேறிய மயில்சாமியின் நீண்ட நாள் ஆசை..!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமானார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து தன் அபாரமான நடிப்பு திறனால் ரசிகர்களை ஈர்த்த மயில்சாமியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

குறிப்பாக மயில்சாமி ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல குணம் படைத்த மனிதர் என்பதால் தான் அவரின் மறைவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதவி என கேட்டு வரும் யாராக இருந்தாலும் தன்னால் முடிந்த உதவியை தயங்காமல் செய்யும் மயில்சாமி சில சமயங்களில் கடன்வாங்கியும் உதவிகள் செய்துள்ளார்.

இவ்வாறு நல்லுள்ளம் கொண்ட மயில்சாமி 57 வயதிலேயே பிரிந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பல படங்களில் நடித்துள்ள மயில்சாமி தனக்கு கிடைக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்ய தவறியதே இல்லை.

பெரும்பாலும் பல படங்களில் ஓரிரு காட்சிகளிலேயே வரும் மயில்சாமி தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு பல படங்களை நாம் கூறலாம். மேலும் தூள், லண்டன், தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் காலத்தாலும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது.

இந்நிலையில் இதுபோல் மயில்சாமி பல படங்களில் நடித்தாலும் அவருக்கு பல ஆண்டுகளாக ஒரு ஆசை இருந்து வந்ததாம். அதாவது ஒரே ஒரு படத்திலாவது மது அருந்தாத கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்பது தான் அந்த ஆசையாம்.

பொதுவாக மயில்சாமி பல படங்களில் மது அருந்துவது போல காட்சிகளில் நடித்துள்ளார். எனவே ஒரு படம் முழுக்க மது அருந்தாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த மயில்சாமிக்கு அந்த ஆசை க்ளாஸ்மெட்ஸ் என்ற படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. குறிப்பாக இந்த படம் தான் மயில்சாமி நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your Adblocker