உலக செய்திகள்
அணு ஆயுதம் பயன்டுத்தினால்…: ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி

வாஷிங்டன் : உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், ‘உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சரியான பதிலடியை அமெரிக்கா, அதன் நேச நாடுகள் கொடுக்கும்.
உக்ரைன் தனது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும்’ என்றார்.ஐ.நா.வின் 77வது பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புடின் வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.