
மார்ச் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை மைய தென்மண்டல் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் வரை மேல் திசை கீழ் திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிகழ்கிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இங்கும் அங்குமாக கோடை மழை பெய்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைக்காலங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். சென்னை மற்றும் புறநகரில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மழை தொடரும். மார்ச் 20ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும். மேகத்தின் அமைப்பு, கடற்காற்றை பொறுத்து ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கூறினார்.