நான் இல்லாமல் இந்தியா ஜெயித்து விடுமா?

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள், உலகக் கோப்பை நேரத்தில் அணியைப் பாதிக்கும் என்று விராட் கோலியிடம் பிசிசிஐ நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விஷயத்தை போட்டு உடைத்ததன் மன உளைச்சலில்தான் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை என்று கூறப்படுகிறது.
அவர் நான் இல்லாமல் ஜெயித்து விட முடியுமா பார்க்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக சில வட்டாரங்கள் கூறினாலும், ஆஸ்திரேலியாவில் அவர் ஒரு டெஸ்ட்டுனனேயே போன போது நம்பிக்கையுடன் போனதுதான் நம் நினைவுக்கு வருகிறது, ரகானே ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றார். எனவே விராட் கோலி நாஅன் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற மனநிலையில் இருக்க முடியாது என்பதற்கு அந்த சம்பவமே உதாரணமாக திகழ்கிறது. ஆனால் ஒருசில ஊடக வட்டாரங்கள் இப்படி எழுதுகின்றன.
தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்குச் செல்லும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்ல முறையில் ஏற்றுக்கொண்டனர். வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை. தயக்கமும் காட்டவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனால் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது குறித்துக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கோலியிடம் கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டோம் எனக் கூறியுள்ளதால் எந்த தரப்பிலிருந்தும் உண்மை மட்டும் வரவே வராது என்று தெரிகிறது.