
துருவ் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலமாக நடிகராக களமிறங்கினார். அதற்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் அப்பா விக்ரம் உடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது துருவ் ஆதித்ய வர்மா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் டேட்டிங் சென்றிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அவர்கள் இருவரும் 2022 புத்தாண்டை துபாயில் ஜோடியாக கொண்டாடி இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. துருவ் தான் அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பகிர்ந்து இருக்கிறார்.
