டிஜிட்டல் பேமெண்ட்.. ஆர்பிஐ-யின் புதிய சேவை..!

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை, மத்திய அரசுக்குப் பல வழிகளில் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகள் பலன் அளித்துள்ளது.
இந்தியாவின் பெரு நகரங்களில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் இன்னும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் மக்கள் பயன்படுத்தாத ஒன்றாகத் தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட்
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் ரிசர்வ் வங்கிக்கு UPI சேவை தளம் எந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியும் பெருமையும் கொடுத்ததோ அதைவிட மிகப்பெரிய தாக்கத்தை ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகப்படுத்த இருக்கும் ஆப்லைன் பேமெண்ட்ஸ் சேவை உருவாக்க உள்ளது
ஆப்லைன் பேமெண்ட்
நீங்கள் நினைப்பது சரி தான் ஆப்லைன் பேமெண்ட் அதாவது இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் பணத்தை டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்புவது அல்லது பேமென்ட் செய்யும் சேவைக்கான ப்ரேம்வொர்க்-ஐ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இப்புதிய ஆப்லைன் பேமெண்ட் ப்ரேம்வொர்க்-ல் அதிகப்படியாக ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாயும், மொத்தமாக 2000 ரூபாய் வரையில் பேமெண்ட் செய்ய முடியும்.
மேலும் இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு additional factor of authentication (AFA) தேவையில்லை அதாவது ஒடிபி போன்ற எதுவும் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆப்லைன் பேமெண்ட் என்பதால் பணம் செலுத்திவிட்டதற்கான SMS காலதாமதத்துடன் கிடைக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.