
‘ஓ சொல்றியா’ பாட்டு பாக்க ஆசையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான ‘புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1′ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. லீட் ரோலில் நடித்துள்ள அல்லு அர்ஜூனுடன், ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாள திரைப்பட உலகின் ஸ்டாரான ஃபகத் பாசிலுக்கு இந்த திரைப்படம் மூலம் முதன்முதலாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை கடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சமந்தா ஆடியுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ ஐட்டம் சாங், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் பாட்டு ஒன்றே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், அதற்கு சற்றும் குறையாமல் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. புஷ்பா படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படத்தின் பார்ட் 1, , பிரைம் வீடியோவில் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 200 -க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் புஷ்பா படத்தை ஒடிடி யூசர்கள் பார்க்க முடியும். இதுகுறித்து பேசிய இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர் மெங்க்னானி, ” புஷ்பா படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அசரவைக்கும் சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை படத்தில் இருப்பதால், ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.