உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி மரணம்

ஓசூர் அருகே பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி மரணமடைந்துள்ளார். தனது கிராமமான சினிகிரிப்பபள்ளியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளிச் சென்று பேருந்து நிற்பதற்குள் பதற்றத்தில் பள்ளி மாணவி குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவி விழுந்ததில் பேருந்தின் பின்சக்கர் மேலே ஏறியதில் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.